காமராசர் பல்கலையில் இணையவழி அடிப்படை அறிவியல் வகுப்புகள் தொடக்கம்

By என்.சன்னாசி

சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக துணைவேநதர்கள் மாநாட்டில் தொற்றுநோய், வைரஸ் ஆராய்ச்சிகுறித்து விழிப்புணர்வுஏற்படுத் துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்கள், வைராலஜி, நோயியல் சார்ந்த இணையவழி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இணையவழியில் வரவேற்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் 46 மாணவர்கள் மேற்கண்ட மூன்று வார கால படிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகுப்புகளுக்கான தொடக்க விழா இன்று காலை நடந்தது.

காமராசர் பல்கலையில் தொற்று நோய்கள், நோய்த் தொற்று இயல், வைராலஜி சார்ந்த இணையவழி அடிப்படை அறிவியல் வகுப்புகளை பல்கலை துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசும்போது, "சமூகம் சார்ந்த கொள்ளை நோய் குறித்த தகவல்கள் முக்கியத்துவம் கொள்ளை நோய் கட்டுப்படுத்துதலில் இளைஞர்களின் பங்கு தேவை" என்றார்.

சண்டிகார் மருத்துவப்பட்ட மேல்படிப்பு ஆராய்ச்சி மையத்தின் நோய் எதிர்ப்பாற்றல்துறைத் தலைவர், இந்திய நோய்த் தடுப்பாற் றல் சங்கத் தலைவர் சுனில் அகர்வால் பேசினார்.

இணைய வழி கல்விக்கு பதிவு செய்த மாணவர்கள், அமெரிக்க, மலேசியாவில் இருந்து வகுப்பெடுக்கும் அறிவியல் அறிஞர்களும் மற்றும் இணையவழி வகுப்புகள் ஒருங்கிணைப்பாளர்கள் சகீலா, கோபால், பேராசிரியர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்