சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரயில்வே சார்பில் சிறார்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள்

By செய்திப்பிரிவு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கான ஓவியம், கட்டுரை, வார்த்தைகளை உருவாக்குதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கோவை ரயில் நிலைய இயக்குநர் சதீஸ் சரவணன் கூறியதாவது:

"5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 'செடிகள்', 'விலங்குகள்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி, 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 'சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் 'CELEBRATE BIODIVERSITY' என்ற வார்த்தையில் இருந்து அதிகபட்ச ஆங்கில வார்த்தைகளை உருவாக்குதல் போட்டி, 12 முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு 'சுற்றுச்சூழல் மாசுபாடு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் 'உலக சுற்றுச்சூழல் தினம்' குறித்து 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல் போட்டி, 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 'பல்லுயிர் பரவல் (BIO DIVERSITY)' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் 'பல்லுயிர் பரவல்' குறித்து 200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

ஓவியம், கட்டுரை போட்டிகளின் செயல்பாடுகளை 'A4' அளவு வெள்ளை தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அதில் பங்கேற்பாளரின் பெயர், பிறந்த தேதி, முகவரியுடன் பெற்றோரின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை காகிதத்தின் மேல் எழுதி, ஒவ்வொரு செயல்பாட்டையும் ஒரு பக்கத்துக்கு மிகாமல் 'பிடிஎஃப்' வடிவில் அனுப்ப வேண்டும். படைப்புகளை 9003956955, 9003956426 என்ற எண்களில் வாட்ஸ் அப் அல்லது 'டெலிகிராம்' செயலி மூலமாக அனுப்பலாம்.

இல்லையெனில், stationdirectorcoimbatore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பங்கேற்கும் அனைவரும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் அனுப்பப்படும்"

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE