10-ம் வகுப்பு மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத ஏற்பாடு: பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் உறுதி

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் பாதுகாப்பாக எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், கூறியதாவது:

மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதில் எந்த குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் தெரிவித்துள்ளோம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எனவே, பெற்றோர் அச்சப்படவேண்டியதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுத வசதியாக 12 ஆயிரத்து 864 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி திறப்பது தொடர்பாக இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மலைப்பகுதியில் உள்ள மாணவர்கள் பாடத்தை ஆன்லைன் மற்றும் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்க முடியும். அவர்கள் தங்களின் தேர்வு முடிவு வெளியான 2 நிமிடங்களில் செல்போன் குறுஞ்செய்தி மூலம் அறிய முடியும் போது, பாடங்களை கற்றுகொள்வதற்கான வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்