பிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்?- ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: மே 31-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ இணையவழி ஆலோசனை நிகழ்ச்சி வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்மாணவர்களுக்காக வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாயமுகாம் (லிட்டில் ஃபார்மர்), எதிர்கால உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான உரையாடல் என பல்வேறுசெயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே, அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பிளஸ் 2 மாணவர்களிடம் கேள்விகள் எழும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைதருவதோடு, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கும் விதமாக, ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோசனை நிகழ்ச்சியை இணையத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க உள்ளது.

இந்தத் தொடர் கூட்டத்தின் முதல் அமர்வு வரும் 31-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்ளது.

இதில், ‘உயர்வுக்கு வேளாண் கல்வி’ என்ற தலைப்பில் வேளாண்மை கல்வியின் முக்கியத்துவம் குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்சரல் சயின்ஸின் தலைமை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் மற்றும் முதுகலை திட்டத் தலைவரான டாக்டர் சுதீஷ் மனலில் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ரூ.99 பதிவுக் கட்டணம் செலுத்தி, http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து, 2 மாத ‘இந்து தமிழ் திசை’ இ-பேப்பரை இலவசமாகப் பார்க்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு 9840961923, 8870260003, 9003966866 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்