அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: முன்பதிவு அவசியம்

By செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்புக் கல்வியாண்டுக்கான நீட் இலவசப் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது.

இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துப் பயிற்சி வகுப்புகளும் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 15-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினந்தோறும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவம் இணையத்தில் தொடங்கியுள்ளது.

இதில் பயிற்சி பெற விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் மாணவர்கள் பெயர், இ-மெயில், பள்ளி முகவரி, மாவட்டம் ஆகியவற்றோடு நீட் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவம், ஜூன் 8-ம் தேதியோடு முடிவடைகிறது. பயிற்சி வகுப்புகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்