கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு தொடர்பாக தூத்துக்குடி வஉசி கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் மீன்வளக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தூத்துக்குடியில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் வஉசி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் ப.சுந்தரமூர்த்தி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வஉசி கல்லூரி விலங்கியல் துறை தலைவர் து.ராதிகா முன்னிலை வகித்தார்.
ஆராய்ச்சி துறையில் தகவல் பரிமாற்றம், பேராசிரியர்களின் துறைசார் அறிவு பகிர்வு, மாணவ, மாணவியருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறைகள் நடத்துவது, இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து ஆராய்ச்சி திட்டங்களை நடத்துவது, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது, மாணவ, மாணவியரை சுயதொழில் முனைவோராக்கிட பயிற்சி பட்டறைகளை நடத்துவது ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
» தென்காசி மாவட்டத்தில் 3 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி
» இணையவழி வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023-ம் ஆண்டுவரை மூன்றாண்டு காலம் செயல்பாட்டில் இருக்கும் என, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago