யுஜிசி நெட் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதியை மே 31-ம் வரை நீட்டித்து, தேசியத் தேர்வுகள் முகமை மாணவர்களுக்குக் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும்.
இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.
இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
» கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்தே பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
» 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு இ-பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில், யுஜிசி நெட்டுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி 16.05.2020-ல் இருந்து, மே 31-ம் தேதி வரை 15 நாட்களுக்குத் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago