கரோனா தொற்று ஏற்பட்டது என்று முடங்கிப் போய்விடாமல், அர்ப்பணிப்புடன் மருத்துவமனையில் இருந்தே ஆசிரியர் ஒருவர் தினந்தோறும் பாடம் கற்பித்து வருகிறார். அவரது சேவைக்கு சக ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
லடாக் யூனியன் பிரதேசம், லே மாவட்டத்தில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கிஃபாயத் ஹுசேன்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் தனது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவமனையில் இருந்தவாறே இணைய வழியில் ஜூம் மூலம் தொடர்ந்து பாடம் கற்பித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''கற்பித்தல் என்னுடைய வேலை மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கை. சிகிச்சை முடிந்து வருங்காலத்தில் நான் பாடம் கற்பிக்கச் சென்றால், நேரக் குறைவு காரணமாக மாணவர்கள் அவதிப்படுவார்கள். அதுகுறித்துக் கவலையாக இருந்தது. இப்போது எனக்குப் போதிய அளவு திறன் இருக்கிறது. அதனால் இப்போதே கற்பித்தால் என்ன என்று எண்ணினேன்.
என்னுடைய பள்ளி எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக உள்ளது. அவர்கள் டிஜிட்டல் போர்டுகளையும் பேனாக்களையும் வாங்கினர். தினந்தோறும் மதியம் 2 முதல் 3 மணி வரை ஜூம் வழியே பாடம் கற்பிக்கிறேன்.
வீடியோக்களைப் பதிவு செய்து, யூடியூப்பிலும் பதிவேற்றி, மாணவர்களுக்கு அனுப்பி வருகிறேன்'' என்றார் கிஃபாயத் ஹுசேன். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago