பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம்?- மக்களிடம் டெல்லி அரசு கருத்துக் கேட்பு

By பிடிஐ

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு மீண்டும் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது குறித்து டெல்லி அரசு மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

கரோனா தொற்றை அடுத்து மார்ச் 16 முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, காலவரையறை இல்லாமல், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த பிறகு, பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களிடம் டெல்லி அரசு கருத்து கேட்டுள்ளது. கல்வித்துறை இயக்குநரகத்தின் இணையதளத்தில் இதுதொடர்பாக ஆன்லைன் கருத்துப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

அதில், ''மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஊரடங்கு காலத்துக்குப் பிறகு மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் ஆலோசனைகளையும் வழங்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஏற்கெனவே ஜூன் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்