ஏழைக் குழந்தைகளுக்காக சாலையோரப் பள்ளி: நெகிழவைக்கும் காவலர்

By செய்திப்பிரிவு

ஏழைக் குழந்தைகள் இருவருக்காக சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து, பாடம் சொல்லிக் கொடுத்து, காவலர் ஒருவர் நெகிழ வைத்திருக்கிறார்.

கரோனா வைரஸால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இணைய வகுப்புகள் கிடைக்க வழி இல்லாமல் விளிம்புநிலைக் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், ஏழைக் குழந்தைகள் இருவருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ''இந்தப் பெருந்தொற்று காலத்தில் காவல்துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. உத்தராகண்ட் அருகே ருத்ராபூரின் சாலையோரத்தில் அக்கா, தங்கை இருவருக்கும் காவலர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.

12 மணி நேரம் பணிசெய்த பிறகும் சாலையோரத்தில் அமர்ந்து கற்பிப்பது எத்தனை உத்வேகம் அளிப்பதாக உள்ளது?, அந்தக் காவலருக்கு எனது வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

15 hours ago

வெற்றிக் கொடி

16 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்