சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சிசோடியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை முழுமையாக ரத்து செய்து விட்டு அகமதிப்பீடு அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என டெல்லி மாநில கல்வித்துறை அமைச்சரும் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ தேர்வுகள் இன்னமும் நடத்தி முடிக்கப்படவில்லை.

குறிப்பாக 10-ம் வகுப்பு தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே கரோனா பிரச்சினை எழுந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு சிபிஎஸ்இ அறிவித்து விட்டது. அதேசமயம் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் பள்ளி திறக்கும்போது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை முழுமையாக ரத்து செய்து விட்டு அகமதிப்பீடு அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும். அதுபோலவே அடுத்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் 30 சதவீத அளவுக்கு பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும். இதுமட்டுமின்றி ஜேஇஇ உட்பட அகில இந்திய அளவில் கல்லூரிகள் மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் 30 சதவீதம் குறைக்க வேண்டும்’’ எனக் கூறினார

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்