தேனி சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு

By என்.கணேஷ்ராஜ்

தேனி சட்டக்கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேனி அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு பாடத் திட்டத்திலும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 3 ஆண்டு பாடப் பிரிவிலும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பிரிவுகளிலும் தலா 80பேர் வீதம் 160 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஊரடங்கு முடியும் வகையில் இணையச் செயலி மூலம் பாடம் நடத்த சட்டக்கல்வி இயக்குநர் ந.ச.சந்தோஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்வர் ரா.அருண் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

தினமும் இணையச் செயலி மூலம் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறையில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இணையதளத்தில் வருகைப் பதிவேடும் எடுக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்