அனைத்து பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்.30 வரை விடுமுறை

By செய்திப்பிரிவு

அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏப்ரம் 30-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 16 முதல் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டன. 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 14-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏப்ரல் 30 வரை ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏப்ரம் 30-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்துவிதமான செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் உட்பட அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தலுக்கான புத்தகங்கள், காணொலிகள் பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

மேலும்