ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் கேரளா; ஆன்லைன் வாயிலாக விடைத்தாள் திருத்தவும் ஆலோசனை 

By செய்திப்பிரிவு

கேரள அரசு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க முடிவெடுத்துள்ளது. அதேபோல ஆன்லைன் வாயிலாக விடைத்தாள்களைத் திருத்துவது குறித்தும் சிந்தித்து வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள உதவித்தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஆன்லைன் வழியாக தேர்வுத்தாளைத் திருத்துவது குறித்தும் சிந்தித்து வருகிறோம்.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் நாடு திரும்புவதற்காக தனி விண்ணப்பப் படிவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவர்களுக்குக் காப்பீடும் விமானக் கட்டணத்தில் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வெளிநாடுகளில் படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த விண்ணப்பப் பதிவேற்றம் அவசியமாகும்.

கரோனா மருத்துவப் பணிக்காக சுகாதாரத் துறையில் 99 செவிலியர்களைப் பணிக்கு எடுக்க, வேலைவாய்ப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் நாடு முழுவதும் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

மேலும்