4000 தொடக்கப் பள்ளிகளை மூட நடவடிக்கையா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

4000 தொடக்கப் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பரவும் வதந்திக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில், கடந்த சில நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர்ப் பட்டியலை வட்டாரக் கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெறுவதாகவும், அதன் மூலம் 25 மாணவர்களைவிட எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை மூடி அருகிலுள்ள பள்ளியுடன் இணைத்திட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறியப்படுகிறது.

அந்த நடவடிக்கை உண்மை எனில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகிவிடும். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட விவசாய மக்கள், நடுத்தர மக்களின் கல்வி வாய்ப்பை முற்றிலும் முடக்குவது போல் அமைந்து விடும்.

சுமார் 4,000 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி வெளியாவது அரசின் சிறப்பான நடவடிக்கைகளைக் கெடுப்பதாக ஆகிவிடும். இச்செய்தி உண்மையெனில் பாதிப்பு எல்லா நிலைகளிலும் உருவாகி இடைநிற்றல் அதிகரிக்கும். கிராமப்புற மக்கள் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படும்.

25 மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள கிராமப்புறப் பள்ளிகளை மூடிவிடும் நடவடிக்கையினை நிறுத்திவிடவும் அதன் மூலம் கிராமப்புற மக்களின் கல்வி கற்கும் நிலையினைத் தடுக்காமல் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்