கல்விக் கட்டணம் கட்டுவதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றன.
இதனிடையே, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் கட்டுவதிலும் காவ அவகாசம் தேவை என்று சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம். பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைக் கட்ட இயலாமல் தவிக்கிறார்கள். எனவே, தாங்கள் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசுக் கல்விக் கட்டணங்களைச் செலுத்த 3 மாதங்கள் கால அவகாசத்தை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago