ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே விடைத்தாள் திருத்த அனுமதி: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டில் இருந்து மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், ''தமிழகம் முழுவதும் +1,+2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் விடைத்தாள் மதிப்பீட்டு பணி, ஏப்ரல் மாதத்தில் சுமார் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு விடைத்தாள் மையத்திலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் விடை திருத்தும் பணியில் ஈடுபடுவர். அனைவரும் ஒரே நேரத்தில் கூடுவதால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள் அவர்களின் இல்லங்களிலேயே இருந்து மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

அது முடியாத பட்சத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தினந்தோறும் தரமான முகக் கவசம் மற்றும் சானிட்டைசர் உள்ளிட்ட கிருமி நாசினிகளை பள்ளி கல்வித் துறை சார்பில் வழங்கப்பட வேண்டும்.

விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கும் அலுவலராக முதுகலை ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்யவேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்