கோவாவில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு; 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி 

By செய்திப்பிரிவு

கோவாவில் 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் உட்பட 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுவதாகவும் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலே தேர்ச்சி அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வந்தனா ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மறு உத்தரவு வரும் வரை அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. கரோனா பரவலை அடுத்து 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் உட்பட 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகின்றன.

ஏற்கெனவே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்குத் தேர்வு இல்லாமலே தேர்ச்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் கரோனா வைரஸால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்