பத்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் மாநிலங்களவைக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை அல்லது முதுகலை படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோடை விடுமுறையில் 2 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். மாதாமாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். 10 நபர்கள் இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த இன்டர்ன்ஷிப்பைப் பெற மார்ச் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். rssei.rsrs@sansad.nic.in என்ற இணைய முகவரிக்கு மாணவர்கள் மெயில் அனுப்ப வேண்டும். அல்லது எஸ்.டி. நட்டியால், இணைச் செயலாளர், மாநிலங்களவைச் செயலகம், அறை எண் 517, ஐந்தாவது மாடி, நாடாளுமன்ற மாளிகை இணைப்பு, புது டெல்லி - 110001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.
மாநிலங்களவை ஆய்வு மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை வெவ்வேறு விதங்களில் ஆய்வுசெய்து, புரிந்து கொள்வதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மாணவர்களுக்கு 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவை சார்பில் 18 மாதங்கள் ஃபெல்லோஷிப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago