உலகம் முழுவதும் பரவி வரும் கரோனாவால் சுமார் 85 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ''முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொண்டு இருக்கிறோம். 102 நாடுகளில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 11 நாடுகளில் பகுதியளவு மூடப்பட்டுள்ளன. இன்னும் நிறைய நாடுகளில் பள்ளிகள் விரைவில் மூடப்படும்.
இதன் மூலம் சுமார் 85 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தடைபட்டிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதியாகும்.
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது. எனினும், காணொலி வகுப்புகள் மற்றும் இன்ன பிற தொழில்நுட்ப வசதிகள் மூலம் கற்றல் இடைவெளி குறைக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் சில நாடுகளில் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
எனினும் தடையில்லாத கற்றலை அனைத்து மாணவர்களுக்கும் தருவதில் உலக நாடுகள் தற்போது சவாலை எதிர்கொண்டு வருகின்றன'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago