பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள் என்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவிகளை புதுச்சேரி ஆட்சியர் ஊக்கப்படுத்தினார்.
புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி, தேர்வு எழுதத் தேவையான பேனா, ஜியோமெட்ரி பாக்ஸ் போன்றவை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருண் பங்கேற்றார். தேர்வை பயம் இல்லாமல் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு தனது அனுபவங்களையும் கூறி மாணவிகளை வாழ்த்தினார்.
"பாடங்களை விருப்பத்துடன் படித்தல் அவசியம். புரிந்து படித்தால் வெல்லலாம். அரசுப் பள்ளியில் படித்து சாதித்தோர் பலருண்டு" என்று ஆட்சியர் அருண் குறிப்பிட்டார். தேர்வு எழுதத் தேவையான பேனா, ஜியோமெட்ரி பாக்ஸ், சான்றிதழ்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு ஃபைல் ஆகியவற்றை வழங்கினார்.
» ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?- மத்திய அரசு பதில்
» கரோனா: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை; தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்நிகழ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, 'குளங்கள் காப்போம்' குழு கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் எழில் கல்பனா முன்னிலை வகித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago