ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?- மத்திய அரசு பதில்

By செய்திப்பிரிவு

ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக கெளஷலேந்திர குமார் எம்.பி., ''ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஆரம்பக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இதுதொடர்பான திட்டம் ஏதாவது மத்திய அரசுக்கு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

அவர் கூறும்போது, ''நிதி ஆயோக்கின் ஆலோசனைப்படி ஆரம்பக் கல்வியைத் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை'' என்று தெரிவித்தார்.

2017-ல் நிதி ஆயோக் சில ஆலோசனைகளை அரசுக்கு அளித்திருந்தது. அதன்படி, ''அரசு-தனியார் கூட்டு (PPP) மூலம் முறையாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம்.

அதிக அளவிலான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது, கற்பித்தலில் குறைந்த நேரமே செலவிடுவது, குறைவான கல்வித் தரம் ஆகியவற்றால் பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளின் ரிசல்ட் மோசமாக உள்ளது'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்