இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொடக்கக் கல்வி பட்டய தேர்வு (இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு) ஜூன் 3-ம் தேதிதொடங்கி 22-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
அத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள மாவட்டஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சிநிறுவனத்தில் வெப்-கேமரா வசதி இருப்பதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தைபதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தையும் செலுத்திவிடலாம்.
தேர்வுக் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதல் ஆண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (2-ஆம் ஆண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50.
ஆன்லைன் விண்ணப்பங்களை மார்ச் 30 முதல் ஏப்ரல் 4-ம் தேதிவரை சமர்ப்பிக்கலாம். தபால்வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago