கரோனா முன்னெச்சரிக்கை: விழிப்புணர்வுக் கவிதை வெளியிட்ட சிபிஎஸ்இ

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிபிஎஸ்இ கவிதை வெளியிட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வரும் தொற்றால், இந்தியாவில் 8 மாநிலங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிபிஎஸ்இ கவிதை வெளியிட்டுள்ளது. வணக்கம் சொல்வதன் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் தொடுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வரிகள்:

சிபிஎஸ்இ சார்பில் மாணவர்களுக்கு வணக்கம்,
உங்களின் அறிவுக்குத் தலைவணங்குகிறோம்!
உங்களின் கைகள்
எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்!
இருமல், தும்மலில் இருந்து
முகத்தைத் தற்காத்துக் கொள்ளுங்கள்!
அவைதான் கரோனாவின்
முதல் நண்பன்..!
அனைவருக்கும் வணக்கம் சொல்லுங்கள்
கை குலுக்கும் பழக்கம் வேண்டாம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்