கை கழுவுதல், கைக்குட்டை பயன்பாடு, குறும்படம்: ராகல்பாவி அரசுப் பள்ளியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்வு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு திருப்பூர் மாவட்டம், ராகல்பாவியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

உலகெங்கிலும் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசு பல்வேறு சிறப்பு சுகாதார முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றது.

குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வுக் கையேடும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள், தங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது, முக்கியமாகக் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று கூறி, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 20 வினாடிகள் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்றும், தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கைக்குட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசால் வெளியிடப்பட்ட குறும்படம் அனைவருக்கும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. கரோனா வைரஸ் வருமுன் காப்பது எப்படி என்ற கருத்துகள் அடங்கிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. இவை குறித்து பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார்.

நிகழ்வுக்குப் பள்ளித் தலைமையாசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ராகல்பாவி ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்