சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் 25 ஆசிரியர், 600 மாணவிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நோய் தடுப்பு, முறையாக கை கழுவுவது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

நோய்களை தடுப்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோய் தடுப்பு மற்றும் முறையாக கைகழுவுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது. 25 ஆசிரியர்கள், 600 மாணவிகள் பங்கேற்றனர்.

சோப்பு பயன்படுத்தி 20 விநாடி களுக்கு முறையாக கை கழுவி னால் நோய்க் கிருமிகளை அழிக்க முடியும் என்று இதில் விளக்கிக் கூறப்பட்டது. முறையாக சோப்பு பயன்படுத்தி கைகழுவுவது குறித்து மாணவிகளுக்கு செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பின்னர், மாணவிகள் அனை வரும் சோப்பு போட்டு கை கழுவினர். நிறைவாக, அனைவரும் நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் முனைவர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்