பொதுத் தேர்வுகளுக்குப் புதிய தேதி: டெல்லி வன்முறையால் தள்ளிவைத்த தேர்வுகளுக்காக அறிவித்த சிபிஎஸ்இ

By செய்திப்பிரிவு

டெல்லி வன்முறையால் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளுக்குப் பதிலாக தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கு சிபிஎஸ்இ மறுதேதி அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்கிடையே டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 17-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்தத் தருணத்தில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் தேர்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு, சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வட கிழக்கு டெல்லியில் பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைப்பதாக சிபிஎஸ்இ அறிவித்தது.

தற்போது டெல்லி சூழல் முழுமையாக சீரடைந்து விட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்புக்கான சிறப்புத் தேர்வுகள் மார்ச் 21 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் 12-ம் வகுப்புக்கான சிறப்புத் தேர்வுகள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாணவர்கள் தங்களின் பள்ளிகளை மார்ச் 14-ம் தேதிக்கு முன்பாக அணுகி விவரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்