பொதுத்தேர்வு: சிறையிலும் தேர்வு மையம்; தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை

பொதுத் தேர்வை முன்னிட்டு சிறையில் படித்து தேர்வு எழுதுவோருக்கு புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2019-2020-ம் கல்வியாண்டிற்கான மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், வருகிற 02.03.2020 அன்று தொடங்கி 24.03.2020 வரை நடைபெறவுள்ளது. குறிப்பாக காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

இவ்வாண்டிற்கான 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் (புதிய பாடத்திட்டத்தில் 49 சிறைவாசிகளும், பழைய பாடத்திட்டத்தில் 13 சிறைவாசிகளும்) புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதவுள்ளனர்.

தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 4,54,367 ஆகும். இத்தேர்விற்காக சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE