ஆளுநர் மாளிகையில் அறிவியல் தின கொண்டாட்டம்: ஆண்டுதோறும் தொடர முடிவு

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தேசிய அறிவியல் தினம் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த முறையில் திறனை வெளிப்படுத்திய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் முதல் முறையாக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

5 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 பள்ளிகளைச் சேர்ந்த 112 குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அத்துடன் தங்களின் அறிவியல் கண்காட்சியைக் காட்சிப்படுத்தினர். அவற்றில் இருந்து சிறந்த படைப்புகளை ஆறு நடுவர்கள் தேர்வு செய்தனர்.

இதில் பல படைப்புகள் மிகச் சிறந்ததாக இருந்ததாகக் குறிப்பிட்ட கிரண்பேடி, அறிவியல் கண்காட்சியும் அறிவியல் தினமும் ஆண்டுதோறும் ராஜ்நிவாஸில் கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE