தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை திருப்பூர், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றுள்ளது.
1919-ம் ஆண்டு 60 மாணவர்களுடன் உருவான வேலம்பாளையம் தொடக்கப்பள்ளி, 2002-ம் ஆண்டு 400 மாணவர்களுடன் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2005-ல் அன்பாசிரியர் ராதாமணி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.கற்பித்தலுடன் பள்ளி வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தினார். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
என்ன சிறப்பம்சங்கள்?
தனியார் பள்ளிகளின் உள், வெளிக்கட்டமைப்புக்கு ஒரு படி மேல் அமைந்திருக்கிறது திருப்பூர், வேலம்பாளையம் அரசுப் பள்ளி. முழுக்க கான்கிரீட் தளத்தால் கட்டப்பட்டிருக்கும் பள்ளியில், தனித்தனியாக கணினி வகுப்பறை, உச்சரிப்புப் பயிற்சிக்காக ப்ரொஜெக்டர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 20 வகுப்புகளுக்கு மார்பிள் போடப்பட்டிருக்கிறது.
140 மீட்டரில் சுற்றுச்சுவர், 30 கழிப்பறைகள், ஐந்து தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாதபோது பயன்படுத்த ஆழ்துளைக் குடிநீர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் மற்ற திறன்களை வளர்க்க கேரம், நீச்சல், யோகா, கையெழுத்து மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளியின் செயல்பாடுகளால் கவரப்பட்ட பெற்றோர், தனியார் பள்ளிகளை விடுத்து வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தங்களின் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். பள்ளிக்கென சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல் நன்கொடை பெற்று நன்கொடையாளர்களின் பெயர்களை, பள்ளியில் கல்வெட்டு வைத்துப் பொறித்திருக்கின்றனர்.
வட மாநிலத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருப்பூர் என்பதால், அவர்களின் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர். வட மாநில மாணவர்களுக்கு இந்தியும் இங்கே கற்றுத் தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த நிலையில், 2019-20 ஆம் கல்வியாண்டில் வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் 1,343 பேர் படித்து வருகின்றனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை வேலம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி பெற்று அசத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago