ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக வெளியான மொட்டைக் கடிதம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''2012-13 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கடிதம் வந்தது. அதில் கையெழுத்து கூட இல்லை.
மொட்டைக் கடிதமே அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினோம். விசாரணையின் முடிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
2019 -20 ஆம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படுகின்றன. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, மார்ச் 26-ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுத உள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி, மார்ச் 24-ம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago