ஒடிசாவில் உள்ள 34 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மாநில அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமிர் ரஞ்சன் தாஸ் சட்டப்பேரவையில் பேசும்போது, ''ஒடிசாவில் உள்ள 90 பள்ளிகளில் கரும்பலகை வசதி இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 34,394 பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படவில்லை.
அதேபோல 37,645 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. 2,451 பள்ளிகளில் நூலக வசதியும் 16,368 பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதியும் இல்லை.
எனினும் பள்ளிக் கல்வித்துறை நிர்வகிக்கும் 51,434 தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 5.42 சதவீதமாக உள்ளது. நடுநிலைப் பள்ளியில் இந்த விகிதம் 6.93 சதவீதமாகவும் உயர்நிலைப் பள்ளிகளில் 5.41 சதவீதமாகவும் இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளின் விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை. இந்த விவரங்கள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago