ஜப்பானின் டோக்கியோ நகரில், இன்னும் 5 மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஜப்பான் - ஈகுவேடார் அணிகள் கலந்துகொள்ளும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அந்நாட்டில் நடப்பதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதலால் ஜப்பானில் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜே லீக் கால்பந்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 8-ம் தேதி தொடங்கவுள்ள சுமோ போட்டியை நடத்தலாமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பான் - ஏகுவேடார் அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை ரசிகர்கள் யாருமின்றி உள்ளரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் ஜப்பான் டென்னிஸ் சங்கத்துடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜப்பான் நாட்டின் விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது. இந்த சூழலில் கரோனா வைரஸ் தாக்குதலால் ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஜப்பான் ரசிகர்கள் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago