மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகளில் காலியாக உள்ள 8-ம் நிலை பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. 244 வகையான பதவிகளில் 1,157 காலிப் பணியிடங்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது.
இவற்றில் 9 வகையான பதவிகளுக்கான 32 காலிப் பணியிடங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (தென்மண்டலம்) சென்னைக்கு உட்பட்டவையாகும். இவற்றுள் 7 வகையான பதவிகள் பட்டதாரி அளவிலும், ஒரு பதவி மேல்நிலைக் கல்வி மட்டத்திலும், ஒரு பதவி மெட்ரிக் அளவிலும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு உத்தரவுகளின்படி இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதி உடைய எஸ்சி / எஸ்டி / முன்னாள் படைவீரர் / உயிரிழந்த போர் வீரர்களின் மனைவியர் உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் பணிநிலை தொடர்பான விரிவான விவரங்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் sscsr.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
» பாரத ஸ்டேட் வங்கியில் 8000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்: டிகிரி முடித்திருந்தால் போதும்
» பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 21.02.2020 முதல், 20.03.2020 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான தேர்வு உத்தேசமாக 10.06.2020 முதல் 12.06.2020 வரை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago