Junk (ஜங்க்) என்பது பயன்படாத பொருள்களைக் குறிக்கும். சில சமயம் மிகவும் விலை குறைவான, வீட்டில் பெரும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பொருள்களையும் குறிக்கும். அமெரிக்காவில் ஹெராயின் போன்ற அபாயகரமான போதைப்பொருளைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது. எந்தப் பயனும் மதிப்பும் இல்லாத ஒன்றை வெளியேற்றுவதைக் குறிக்கும் இடத்தில் இது வினைச் சொல்லாகவும் பயன்படுகிறது. All their old laptops had been junked. His ideas were junked by the Committee.
அவர்கள் இருவருமே பள்ளிக்குச் சென்றதில்லை. இந்த வாக்கியத்தை Both of them did not went to school என்று நான் எழுதியதைத் தவறு என்று அடித்துவிட்டார் ஆசிரியர். என்ன தவறு?
Did என்பதே do என்பதன் இறந்த கால வடிவம்தான். எனவே அதைத் தொடரும் verb இறந்த காலத்தில் இருக்காது. Both of them did not go to school எனலாம். They did not come (came அல்ல) to office today. We did not visit (visited அல்ல) the museum. தவிர Both of them did not go to school என்பதற்குப் பதில் Neither (அல்லது Neither of them) went to school என்று குறிப்பிடலாம்.
சென்ற இதழ் தொடர்பாக ஒரு நண்பர், “portmanteau குறித்து நீங்கள் எழுதியதைப்படித்ததும் எனக்குக் கீழ்க்காணும் சொற்கள் நினைவுக்கு வருகின்றன” என்று ஐந்தாறு சொற்களைக் கூறினார். அவற்றில் football, armchair ஆகிய சொற்களும் இருந்தன. எனவே ஒரு சின்ன விளக்கம்.
இரண்டு வார்த்தைகளை அப்படியே இணைத்தால் அது portmanteau ஆகாது. Football, armchair ஆகியவை portmanteau அல்ல. Compound words, அவ்வளவே. Portmanteau சொற்களின் உருவாக்கத்தை இப்படிக் கூறலாம். இரண்டு வார்த்தைகளும் கொஞ்சம் சிதைந்து புதிய வார்த்தையாக வடிவெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டு - காலை உணவு நேரம், மதிய உணவு நேரம் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட வேளையில் நாம் உட்கொள்வதை brunch என்பார்கள்.
Breakfast, lunch ஆகிய இரண்டு வார்த்தைகளின் இணைப்பு இது.சில சமயம் இரண்டு சொற்களின் தொடக்கங்களை இணைத்தும் இப்படி உருவாக்குவது உண்டு. Teleprinter, Exchange ஆகிய இரண்டு சொற்கள் இணைந்து உருவான telex அப்படித்தான்.
Snub என்பது என்ன? - ஒருவரை மட்டம் தட்டுவது. ஒருவர் வரும்போது முகத்தைத் திருப்பிக்கொள்வது, தெரிந்தவர் எதிரே வரும்போது பார்க்காதது போல் கடந்து செல்வது, ஒருவர் கேள்வி கேட்கும்போது வேண்டுமென்றே பதில் சொல்லாமல் வேறொருவரிடம் பேசுவது என்று பல வழிகளில் இது வெளிப்படலாம். Rebuff, ignore போன்றவற்றை இதன் சம வார்த்தைகள் எனலாம்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago