மாணவர்களின் வாழ்க்கையில் படிப்பு ஒருபுறமும், கவனச்சிதறல் மறுபுறமும் உள்ளன. இதில் எதனின் ஈர்ப்பு ஆற்றல் அதிகமாக உள்ளதோ அதன் பக்கம் அவர்கள் மனம் செல்லும். படிப்பின் பக்கம் அதிகமாக இருந்தால் படிப்பை நோக்கியும், கவனச்சிதறல் பக்கம் அதிகமாக இருந்தால் கவனச்சிதறலிலும் செல்லும்.
ஏதோ ஒரு காரணத்தினால், பலருக்கு நல்லதைவிடத் தீயதை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவது இயற்கை விதியாக இருக்கிறது. மாணவர்களும் இவ்விதிக்கு உட்பட்டவர்களே என்பதால், பலருக்குப் படிப்பில் கவனம் செல்வது குறைவாகவும், கவனச்சிதறலில் அதிக ஈடுபாடு கொள்வதும் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள், தங்களுக்குப் படிப்பு வரவில்லை என்று கூறுவது வழக்கமான ஒன்று. கவனச்சிதறல் நம்மை நாடி வருவதில்லை நாம்தான் அதனைத் தேடிச் செல்கிறோம். அதேபோல், படிப்பை நாம் நாடிச் சென்றால் படிப்பும் நம் வயப்படும் என்றுணர வேண்டும்.
உங்களிடமும் உள்ளது! - கவனச்சிதறலில் இருந்து மனம் மாற்றமடைந்து படிப்பை நாடி உயர்வு பெற, அறிவு, விருப்பம், துணை, துணிவு மற்றும் செயல் ஆகிய பண்புகள் தேவையாக உள்ளது. இத்தகைய பண்புகள் அனைவரிடத்திலும் நிறைந்திருந்தாலும், பெரும்பாலானவர்களுக்குள் அவர்கள் அறியாவண்ணம் மறைந்து கிடக்கிறது. தங்களுக்குள் இப்பண்புகள் இருக்கின்றன என்பதை நம்ப மறுப்பதுதான் பலரிடமுள்ள குறை. இவர்கள் நம்பிக்கையோடு செயல்பட்டால் இந்தப் பண்புகள் தங்களிடமும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆழ்ந்து சிந்தித்தால், படிப்பு மற்றும் கவனச்சிதறல் ஆகிய இரண்டுக்குமே மேற்கூறிய ஐந்து பண்புகளும் பொதுவான ஒன்றாக மற்றும் தேவையாகவும் இருப்பது புரியும். இந்தப் பண்புகள், கவனச்சிதறலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை, இன்றையச் சூழலில் நமது கவனத்தைச் சிதறடிப்பதில் முக்கிய காரணமாக இருக்கக் கூடிய கைப்பேசி எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம். இதன் மூலம் தங்களுக்குள் இப்பண்புகள் இருக்கின்றன என்பதைப் படிப்பு சரியாக வரவில்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்களால் உணரமுடியும்.
» Trivia என்பது என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 109
» தித்திப்பான பண்டத்தை நினைத்தாலே இனிக்குமா? | புதுமை புகுத்து 46
புதிய கைப்பேசி, புதிய செயலி (app), புதிய பொழுதுபோக்கு மென்பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் இந்த ஐந்து பண்புகள் வெளிப்படுவதைக் காணலாம். இவற்றையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்வதால் அல்லது பலமுறை செய்து பார்த்துப் புரிந்துகொள்வதால் உங்களுக்குள் அறிவு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த அறிவு வெளிப்படுவதற்குக் காரணம் அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்தின் விளைவாகும்.
எவ்வளவு முயன்றாலும் புரியவில்லை என்றால் அதைப் பற்றி அறிந்தவர் துணையுடன் கற்றுக் கொள்ளுகிறீர்கள். இது கூடத் தெரியவில்லையா என்று அவர் கேலி செய்வார் என்று உணர்ந்தாலும், அதையும் மீறித் துணிவுடன் கேட்டு அறிந்து கொள்கிறீர்கள். இத்தகையச் செயல்களின் விளைவு, கைப்பேசி செயல்பாட்டில் உங்களின் திறனுயர்வு.
துணிந்து சந்தேகம் கேள்! - இன்றைய காலகட்டத்தில் கவனச்சிதறல் தவிர்க்க இயலாதது. படிப்பு வரவில்லை என்று கூறுபவர்கள், கவனச்சிதறலுக்கு பயன்படுத்தும் உங்களின் அறிவு, விருப்பம், செயல், துணை மற்றும் துணிவு ஆகிய பண்புகளைப் படிப்பதற்கும் பயன்படுத்தப் பழக ஆரம்பியுங்கள். அதற்கு முதலில், படிக்க வேண்டும் என்று விருப்பம் கொள்ளுங்கள். புரியவில்லை என்றால் பலமுறை படித்துப் பழகுங்கள்.அப்படியும் புரியவில்லை என்றால் இணையத்தில் பாடங்களை இலகுவாக விளங்க வைக்கும் காணொளிகள் துணையுடன் கற்றுப் புரிந்து படியுங்கள்.
ஆசிரியரிடம் பாடம் புரியவில்லை என்று விளக்கம் கேட்கும் துணிவு கொள்ளுங்கள். எந்த ஆசிரியரும் கேலி செய்யமாட்டார். அப்படிச் செய்பவராக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்கும் துணிவு கொள்ளுங்கள், இத்தகைய பண்புகளைச் செயல்படுத்தும்போது, படிப்பதை நோக்கி உங்கள் மனம் செல்ல ஆரம்பித்துவிடும்.
நீங்கள் படிப்பை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போது, படிப்பு உங்களை நாடி பத்து அடி எடுத்து வைக்கும். இவ்விரண்டும் நடக்கும்போது படிப்பும் மதிப்பெண்களும் உங்கள் வசம். விளைவு, நீங்கள் படிக்க விரும்பும் கல்வியும், மகிழ்வான வாழ்வும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்,‘வல்லமைசேர்’,‘வேர்களின் கண்ணீர்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்; ravikannappan6162@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago