Trivia என்பதை சாரமற்ற தகவல்கள் எனலாம். ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எனும்போது இதுவரை எவ்வளவு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களில் அவர் வென்றிருக்கிறார் என்பது முக்கிய செய்தி. ஆனால், பந்தயத்துக்குக் கிளம்பும்போது அவர் தன் தலையைக் கோதி விட்டுக் கொள்வார் என்பதோ தண்ணீர் பாட்டில்களை ஒரு ஒழுங்குமுறையுடன் வைப்பார் என்பதோ trivia. (கணிசமானவர்களுக்கு முக்கிய செய்திகளை விட trivia அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என்பது வேறு விஷயம்).
கணினியில் login செய்கிறோம். இதன் அடிப்படையான log என்பது எதைக் குறிக்கிறது? - மரத்திலிருந்து முறிந்து விழுந்த அல்லது வெட்டப்பட்ட தடிமனான மரக்கட்டையை log என்பார்கள் ஒரு கப்பலின் அல்லது ஆகாய விமானத்தின் பயண விவரப் பதிவேட்டையும் log என்பதுண்டு. Log என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது, அதிகாரப் பூர்வமாக ஒன்றைப் பதிவு செய்வதை அது குறிக்கிறது. The Police Department has logged 120 complaints. கணினிகள் அதைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலைத் தன் வசம் வைத்திருக்கும். ஒருவர் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகத் தனது உபயோகிப்பாளர் ‘பெயரை’ login செய்கிறார்.
Lottery baron என்கிறார்களே, baron என்பது என்ன? - தொடக்கத்தில் baron என்பது அரச வம்சத்திலுள்ள முக்கியமானவரைக் குறிக்கப் பயன்பட்டது. பிறகு சக்தி வாய்ந்த, அதிகாரம் மிக்க, பணக்காரத் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் வியாபாரிகளைக் குறிக்கவும் அது பயன்படத் தொடங்கியது. அந்த விதத்தில்தான் நீங்கள் குறிப்பிடும் பயன்பாடு.
Show must go on என்று எப்போது கூறுவார்கள்? - ஒரு காரியத்தைச் செய்யும்போது தடங்கல் நேரலாம். வேண்டாத விளைவுகள் தோன்றலாம். அப்போது சோர்ந்துபோய் நாம் உட்காரும்போது நமது நலம் விரும்பி ஒருவர் ஆறுதல் கூறிவிட்டு ‘Show must go on’ என்று கூறக் கூடும். அதாவது தொடங்கியதை முடித்துத்தான் ஆக வேண்டும் என்பது இதற்குப் பொருள்.
ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நாடக நடிகர். நாடகம் தொடங்க இருக்கையில் அவரது தங்கை இறந்து விட்டதான தகவல் அவரை எட்டும். அரங்கில் உள்ள ரசிகர்கள் நாடகம் இன்னும் தொடங்க வில்லையே என்று கூச்சலிடுவார்கள். துக்கத்தை மறைத்துக்கொண்டு கோமாளி வேடத்தில் சிவாஜி கணேசன் மேடையில் தோன்றி நடிப்பார். Because show must go on.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago