Kinda என்ற ஒரு சொல்லை ஆங்கிலப் புதினம் ஒன்றில் படித்தேன். எனது அகராதியில் அதற்குப் பொருள் இல்லை. ஒருவேளை அச்சுப் பிழையோ?
பேச்சு வழக்கில் சில மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அவை அப்படியே எழுத்து வடிவிலும் இடம் பெறுகின்றன. Kinda என்பது kind of என்பதைக் குறிக்கிறது. Do not know என்பது Don’t know ஆகி இப்போது dunnoவாகச் சுருங்கிவிட்டது. Gotcha என்பது Got you என்பதைக் குறிக்கிறது. ‘அதாவது நீ சொன்னதைப் புரிந்து கொண்டேன்’ என்று அர்த்தம்.
Lemme explain என்றால் Let me explain.
‘Gimme a minute’ என்றால் Give me a minute. அதாவது யோசிக்க நேரம் கோருகிறார் அல்லது வேறு ஏதோ வேலையை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடமிருந்து கொஞ்ச நேரத்துக்கு விலகுகிறார்.
Gotta என்பது Got to என்பதை குறிக்கிறது. We have gotta get home before dark.
» ஊடுருவலை மம்தா பானர்ஜி ஆதரிக்கிறார்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
» புதுமை புகுத்து 26: விண்மீன் வெடிக்கப் போகிறது என்பதற்கான அறிகுறி என்ன?
Gonna என்றால் Going to. He is gonna be a musician when he grows up.
Wanna என்பது Want to. I wanna eat lunch now because I am very hungry.
Penchant என்பதன் பொருள் என்ன?
ஒன்றைச் செய்வது உங்களுக்கு உல்லாசமாகவும் பிடித்தும் இருக்கிறது என்பதைக் குறிக்கும் சொல். He has a penchant for fast cars. எதிர்மறையாகவும் இது அடிக்கடி பயன்படுகிறது. ஒன்று பிறருக்குப் பெரும்பாலும் பிடிக்காது என்றாலும் நீங்கள் அதைச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்கிறீர்கள் என்றால் you have a penchant for it. ஏப்பம் வரும்போது அதைப் பெரும் சத்தத்துடன் உற்சாகம் பொங்க வெளியேற்றுவது, வீட்டில் உள்ள பிறருக்கு வரும் கடிதங்களை அவர்களது அனுமதியின்றி கூச்மில்லாமல் பிரித்துப் படிப்பது போன்றவை இந்தச் செயல்களில் உங்களுக்கு உள்ள penchant-ஐ குறிக்கிறது.
He has a penchant for melodrama என்ற எடுத்துக்காட்டைக் கூறினால் melodrama என்பதன் பொருள் என்ன என்று சிலர் யோசிக்கலாம். ஒரு கதையிலோ நாடகத்திலோ திரைப்படத்திலோ வரும் பாத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை விட, மிக அதிக அளவில் அவற்றை வெளிப்படுத்தினால் அதை melodrama என்போம். அவர்களுக்குக் கோபம் என்றால் வெஞ்சினம், சோகமெனறால் பிழிய அழுதல், மகிழ்ச்சி என்றால் ஆனந்த வெள்ளம்.
எதிர்மறை வாக்கியங்களை present continuous tenseல் எப்படி மொழிபெயர்க்க?
He is not dancing - அவன் நடனமாடிக் கொண்டிருக்கவில்லை.
He was not dancing - அவன் நடனமாடிக் கொண்டிருக்கவில்லை.
ஆக ஒரேமாதிரிதான் தமிழில் உருவாக்க வேண்டுமா?
‘அவன் இப்போது நடனமாடிக் கொண்டிருக்கவில்லை. அவன் அப்போது நடனமாடிக் கொண்டிருக்கவில்லை’ எனலாம் வேறு வழியில்லை.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்;தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago