மொழிபெயர்ப்பு | A HOUSE IN THE SKY

By ஜி.எஸ்.எஸ்

Everyone in a village was jealous of an intelligent man named, Praveen. Once the minister called Praveen, "I heard that you are very clever. Can you build me a house in the sky in three days? You may have as many men as you need. You cannot refuse this order”. Praveen made a kite and tied a bell and a long string to it. When the wind blew, the kite rose high up in the air. But it did not fly far, because Praveen tied the string to a tree. Praveen told the Minister, “the house in the sky will soon be ready. Do you hear the bell? The workers are ringing the bell from the sky. They need some boards for the roof of the house. Please tell your soldiers to climb up to the sky with the boards."

"But how will my soldiers climb up to the sky?" asked the minister.
"Oh, there is a way up. Let them climb up the string and they will reach the sky."
Obviously the soldiers couldn’t climb and told the same to the minister.
The minister thought a little and said, "That's right. Nobody can do that."
Then Praveen said to the minister, "If you know that, why do you ask me to build you a house in the sky?"
And the minister could give no answer to that. He knew he was outwitted. Praveen went to the tree, cut the string and took away the kite, and went to his home happily.

வானத்தில் ஒரு வீடு

புத்திசாலியான பிரவீனை கண்டால் கிராமத்தில் எல்லோருக்கும் பொறாமை. ஒருமுறை அமைச்சர் பிரவீனை அழைத்து, நீ ரொம்ப புத்திசாலினு கேள்விப்பட்டேன்! இன்னும் மூன்று நாட்களில் எனக்கு வானத்தில் ஒரு வீடு கட்டித்தர வேண்டும். உனக்குத் தேவையான ஆட்களை அளிக்கிறேன். இந்த ஆணையை நீ மறுக்க முடியாது என்றார்.

ஒரு காற்றாடியில் மணியையும் நீண்ட கயிற்றையும் பிரவீன் கட்டினான். காற்று வீசியதும், காற்றாடி காற்றில் உயர்ந்தது. ஆனால், அது வெகுதூரம் பறக்கவில்லை, ஏனென்றால் பிரவீன் அதன்கயிற்றை ஒரு மரத்தில் கட்டியிருந்தான்.

பிரவீன் அமைச்சரிடம், வானத்தில் வீடு விரைவில் தயாராகிவிடும், உங்களுக்கு மணியோசை கேட்கிறதா? தொழிலாளர்கள் வானத்திலிருந்து மணியை அடிக்கிறார்கள், அவர்களுக்கு வீட்டின் கூரைக்கு சில பலகைகள் தேவை. தயவு செய்து உங்கள் வீரர்களை பலகைகளுடன் வானத்தில் ஏறச் சொல்லுங்கள் என்றான்.

ஆனால், என் வீரர்கள் எப்படி வானத்தில் ஏறுவார்கள்? என்று அமைச்சர் கேட்டார். மேலே செல்ல ஒரு வழி இருக்கிறது, அவர்கள் கயிற்றின் வழியாக வானத்தை அடையலாம் என்றான். ஆனால் வீரர்களால் அவ்வாறெல்லாம் ஏற முடியவில்லை. நடந்ததை அவர்கள் அமைச்சரிடம் கூறினர். அமைச்சர் சற்று யோசித்துவிட்டு, "அது சரி. அது யாராலும் முடியாது" என்றார்.

அப்போது பிரவீன் அமைச்சரிடம், அது உங்களுக்குத் தெரிந்திருந்தால், ஏன் வானத்தில் வீடு கட்டச் சொல்கிறீர்கள்? என்றான். அதற்கு அமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. பிரவீன் தன்னை மடக்கிவிட்டதை அறிந்தார். பிரவீன் மரத்தருகே சென்று கயிற்றை அறுத்து காற்றாடியை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்பினான்.

மொழிபெயர்ப்பாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்