அரசு பள்ளி மாணவர்கள் இனி தொழில்நுட்பத்திலும் பிறருக்கு ‘இணையா’னவர்களே!

By என்.மாதவன்

வீடு ஒன்றில் டிவி வாங்குவது குறித்து விவாதிப்பர். டிவி வாங்கினால் குழந்தைகளின் படிப்பு வீணாகிவிடும் எனவே வாங்க வேண்டாம் என்று பாட்டி வாதிடுவார். அப்படியா! தாத்தா வீட்டிலதான் டிவியே இல்லையே நீ ஏன் பள்ளிக்கூடம் பக்கமே போகலே அம்மா? என மகன் கேள்வி கேட்பார். நீண்ட நாட்களுக்கு முன் பாடநூலில் வந்த கதை இது.

இப்படித்தான் எது புதிதாக வந்தாலும் ஒருவிதமான ஒவ்வாமை நம்மிடம் வெளிப்படுவதுண்டு. இதில், அண்மையில் கரோனா பெருந்தொற்றுக்காலம் பலரது வாழ்க்கையை ஆட்டங்காணச் செய்தாலும் கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் கோலோச்சத் தொடங்கும் போது கல்வி பெறும் முறையிலும், பள்ளி செயல்படும் முறையிலும் அதன் தாக்கம் இல்லாமல் எப்படி இருக்கும்? இந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் இணையம் மூலம் மாணவர்களை இணைத்தபோது அரசு பள்ளி மாணவர்களை தொலைக்காட்சி வழியாக இணைக்க அரசு முயன்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE