“அலர்ட்டா இரு...” என்ற வசனம் நகைச்சுவைக் காட்சிக்காக பயன் படுத்தப்பட்ட போதிலும், அலர்ட்டாக இருக்க வேண்டியதன் உண்மையான அர்த்தத்தை மிகச் சமீபத்தில்தான் நான் உணர்ந்து கொண்டேன்.
சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எனக்கான ஒரு கணக்கினை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி, அதில் நேர்மறை சிந்தனைக் கருத்துக்களை பகிர்ந்து வந்தேன்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த எனது சுய விவரப்படம் மற்றும் எனது பெயரை ஊடுருவி என் பின்பற்றாளர் ஒருவரிடம் நான் கேட்பது போல் பணம் கேட்டு சில கயவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அவர் என்னைப் பற்றி நன்கு அறிந்த நண்பர் என்பதால், பணம் அனுப்பாமல், என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
எனக்குத் தெரியாமல்... நான் எப்போதும் பணம் கேட்டு குறுஞ்செய்திகளை பகிர மாட்டேன் என்பதை அவரிடம் தெரிவித்தேன். எனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உடனடியாக நீக்கப் போகிறேன் என்றும் இனி எனது பெயரைப் பயன்படுத்தி அனுப்பப்படும் எந்த செய்திக்கும் நான் பொறுப்பல்ல என்றும் ஒரு இடுகையைப் பதிவிட்டு எனது பக்கங்களை உடனடியாக நீக்கிவிட்டேன்.
எனக்குத் தெரியாமல் எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெறநினைத்த, அந்த முகம் தெரியாத நபர் மீது கோபம் வந்த போதிலும், இதுபோன்ற நெறியற்ற வழிகளில் இவர்கள் ஏமாற்றுவதற்கு, சமூக வலைத்தளங்களின் இடுகைகளுக்கென எந்த தணிக்கையும் இல்லாததே காரணம் என புரிந்தது.
தவறான பயன்பாடு: கற்ற கல்வியை தவறாகப் பயன்படுத்தி, தனது தொழில்நுட்ப அறிவினால், பிறரது கணக்கினை ஊடுருவிபணம் பறித்தல், பிறரது புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், தனது உண்மைப் பெயரையும், புகைப்படத்தையும் மாற்றி வேறு ஒரு போலி முகம் கொண்டு பெண்களை ஏமாற்றி, தவறான செயல்களை செய்தல், இவை போன்ற இழி செயல்களை, எவ்வித உறுத்தலும் இன்றி இக்கால இளைஞர்களில் ஒரு சிலர் செய்கிறார்கள்.
இவர்கள் கற்ற கல்வியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆக்கத்திற்கு பதிலாக அழிவிற்கு வழி வகுக்கத் தொடங்கிவிட்டன. இவர்களின் இழி செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது நிம்மதியை இழந்து, மனம் கலங்கி, வேதனையில் உழன்று, நித்தமும் வெந்து, நொந்து போகும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தற்கொலைக்கும் தூண்டப்படுகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், பெரியவர்கள், கற்றவர்கள், பெண்கள் என பாகுபாடின்றி பலரும், இந்த சமூக வலைதளங்களினால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது கீழ்வரும் விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகைப்படம் கூடாது: இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர் கள் டி.எம் என்று சொல்லக்கூடிய (டயரக்ட் மெசேஜ்) நேரடி குறுஞ்செய் தியை அனுப்பவே கூடாது. அதேபோல், முகநூல் (ஃபேஸ் புக்) பயன்படுத்துபவர்கள் மெசஞ்சர் ஆப்பை வைத்திருக்கவே கூடாது. அந்த ஆப் மூலமாக எந்த குறுஞ்செய்தியும் அனுப்பக் கூடாது. புகைப்படம் அனுப்புமாறு குறுஞ்செய்தி அனுப்பும் அந்நியரை உடனடியாக பிளாக் செய்துவிட வேண்டும்.
புகைப்படங்களை பொதுவெளியில் பகிரும்போது, அவற்றை யார் வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரைவேட் மெசேஸ் அனுப்புவதை தவிர்த்தாலே, பல பிரச்சினைகளிருந்தும் தப்பிக்க லாம்.
மொத்தத்தில் சமூக வலைதளங் களை பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகளை இன்றைய மாணவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் புரிய வைக்க வேண்டியது, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலையாய பணிஎன்பதை உணர வேண்டும்.
- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago