துபாயிலுள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துபாயில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவர் 86 அடுக்கு மாடிகளைக் கொண்டது. குடியிருப்புப் பகுதிகளுடன் வணிக வளாகங்களும் அமைந்துள்ளன.
இக்கட்டடித்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை திடீரென தீப்பற்றிக் கொண்டது. தீவிபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து ஜார்ஜ் என்பவர் ராய்ட்டர்ஸூடன் கூறும்போது, “நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது தீ விபத்து ஏற்பட்டவுடன் அலாரம் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாங்கள் தரைப்பகுதிக்கு ஓடி வந்துவிட்டோம்.
சுமார் ஒரு மணியளவில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது” என்றார்.
தீ விபத்தினால் ஏற்பட்ட காயம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
டார்ச் கட்டிடத்தில் கடந்த 2015-ம் ஆண்டு இதே போன்ற தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரேபியத்தை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக வணிக வளாகங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீ விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் அங்குள்ள கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்த கேள்விகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago