மேலான வாழ்வு தரும் மெட்டீரியல் இன்ஜினீயரிங்

By ஜெயபிரகாஷ் காந்தி

அறிவியல் ஆர்வத்துடன் பொறியியல் படிப்பை விரும்பிப் படிக்கும் எண்ணம் கொண்டவர்கள் பி.இ. மெட்டீரியல் இன்ஜினீயரிங் சயின்ஸ் பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம். இயற்பியல், வேதியியல் பாடங்களை விரும்பிப் படிக்கக் கூடியவர்கள் மெட்டீரியல் இன்ஜினீயரிங் சயின்ஸ் தேர்வு செய்து படிப்பதன் மூலம், வாழ்வில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

இப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகமும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றும் வழங்குகிறது. ஒவ்வொன்றிலும் தலா 60 இடங்கள் என மொத்தம் 120 இடங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளதால், போட்டியும் இருக்கவே செய்கிறது. பொறியியல் கலந்தாய்வு மூலம் பி.இ. மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை தேர்வு செய்ய முடியும்.

அனைத்து அறிவியல் பாடங்களும் கலந்த படிப்பாக மெட்டீரியல் இன்ஜினீயரிங் சயின்ஸ் உள்ளது. இயந்திரம், உபகரணம் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிப்பது, அந்த மூலப்பொருட்களின் தன்மை, அவற்றை வடிவமைப்பு செய்து, உருவாக்குவது உள்ளிட்டவற்றை இப்படிப்பு மையமாகக் கொண்டுள்ளது.

இயற்பியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கான அருமையான படிப்பாக இது அமைந்துள்ளது. மெட்டீரியல் இன்ஜினீயரிங் சயின்ஸ் படித்து முடித்ததும், நானோ இன்ஜினீயரிங் பட்டமேற்படிப்பு படிப்பது நல்லது. ஏனெனில், நானோ டெக்னாலஜி படிப்புக்கு இப்படிப்பு அடித்தளமாக உள்ளது.

மெட்டீரியல் இன்ஜினீயரிங் சயின்ஸ் பட்டப்படிப்பில் இன்ஜினீயரிங் மெக்கானிக், பிசிக்ஸ் ஆஃப் மெட்டீரியல், பிராப்பர்டி ஆஃப் மெட்டீரியல், தெர்மோ டைனமிக்ஸ் ஆஃப் மெட்டீரியல், அயன், ஸ்டீல் மேக்கிங், பிரின்சிபல் ஆஃப் பவுடர் பிராசசிங் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இதைப் படிப்பதால் மெட்டீரியல் சயின்டிஸ்ட், மெட்டீரியல் டெவலப்மென்ட் இன்ஜினீயர், மேனுஃபேக்சரிங் இன்ஜினீயர், பிராசஸ் இன்ஜினீயர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். DRDO, டாடா ஸ்டீல்ஸ், அசோக் லேலண்ட், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளன.

மெட்டீரியல், செராமிக், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் மூலம் புதுப்புது வகையான உபகரணங்கள், இயந்திர வடிவமைப்பு,

புதிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய படிப்பாக இது உள்ளது. இப்படிப்பை முடித்த கையோடு, எம்.இ., எம்.டெக். படிப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.ஆராய்ச்சி வரை படித்து முடிப்பவர்களுக்கு அமோக வரவேற்பு காத்திருக்கிறது. இங்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மேலைநாடுகளில் பட்டமேற்படிப்பு படிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மேற்படிப்பு படிக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கின்றன. இத்துறையில் உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அறிவியலும் பொறியியலும் கலந்த இப்படிப்பை முடித்தவர்கள் எதிர்காலத்தில் சிறப்பான நிலைக்கு செல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பிளஸ் 2 முடித்தவர்கள் என்னென்ன பட்டப்படிப்பு படிக்கலாம் என்பதுபற்றி இதுவரை தெரிந்துகொண்டோம். பட்டமேற்படிப்புகள் குறித்தும் அதில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்தும் இனி அறிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்