பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாஃப்மேன் மறைந்தார். அவரது இல்லத்தில் இறந்து காணப்பட்டதாகவும், அதிக அளவில் போதப் பொருள் உட்கொண்டதால் இந்த இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஹாஃப்மேன் ஏற்கனவே போதைக்கு அடிமையாக இருந்து, அதிலிருந்து மீண்டு வர சிகிச்சைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
46 வயதான ஹாஃப்மேன், 1991-ஆம் வருடம் நடிப்புத்துறைக்கு வந்தார். செண்ட் ஆஃப் வுமன், ட்விஸ்டர், ஆல்மோஸ்ட் ஃபேமஸ் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் புகழ் பெற்ற ஹாஃப்மன், மிஷன் இம்பாஸிபிள் 3 படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்தார்.
2005-ஆம் ஆண்டு, கபோடி என்கிற படத்தில் ட்ரூமன் கபோடி என்கிற எழுத்தாளராக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றார். 3 முறை சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஹாஃப்மேன் இறப்பிற்கு திரையுலைக்ச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago