எழும்பூரில் கலை, கைவினை கண்காட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் `சவுக் மார்கெட், எடிஷன்-2' என்ற பெயரில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி கடந்த மே 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

வரும் மே 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை தினமும் காலை 10:30 மணிமுதல் இரவு 8:30 மணி வரை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரிய மற்றும் சமகால கலை, கைவினை பொருட்கள், ஜவுளிவகைகள், கைத்தறி துணிகள், நகைகள், வீட்டுஅலங்காரப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள் ஆகியவை, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களின் மூலம் நேரடியாக விற்கப்படுகின்றன.

இங்கு 75-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் திருமணங்களுக்குத் தேவையான லக்னோ சிக்கன்காரி, மணிப்பூரி போட்டரி, ஜோத்புரி ஜூடிஸ், கலம்காரி அச்சுத் துணிகள், சுவர் அலங்காரங்கள் ஆகியவை உள்ளன. மேலும் மேஜிக் ஷோ உள்ளிட்ட சில கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE