உலகின் டாப் 10 ஓட்டல்கள்: ராஜஸ்தான் ஜெய்ப்பூரின் ராம்பாக் பேலஸ் முதலிடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பயண ஆலோசனை நிறுவனமான டிரிப் அட்வைசர், சுற்றுலா பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் உலகின் டாப் 10 நட்சத்திர விடுதிகளை பட்டியலிட்டுள்ளது. இதில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் பேலஸ் முதல் இடம் பிடித்துள்ளது.

இந்த அரண்மனையை மகா ராஜா சவாய் மான் சிங் கட்டினார். இந்த அரண்மனையை டாடா குழுமம் நட்சத்திர விடுதியாக மாற்றி நிர்வகித்து வருகிறது. இந்த விடுதியின் சூழல் மிக ரம்மியமானது என்றும் உணவின் சுவையும் ஊழியர்களின் உபசரிப்பும் இந்த விடுதியை தனித்துவப்படுத்துகிறது என்றும் டிரிப் அட்வைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரிப் அட்வைசர் தளத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ராம்பாக் பேலஸ் விடுதிக்கு 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் மாலத்தீவில் உள்ள ஓசன் ரிசர்வ் பொலிஃபுஷி உள்ளது.

பிரேசிலில் உள்ள கொலின் டி பிரான்ஸ், லண்டனில் உள்ள ஷங்ரி லா -தி ஷார்ட், ஹாங்காங்கில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன், துபாயில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் மார்க்விஸ் ஆகிய விடுதிகள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE