விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி படகு தளத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை சொகுசு படகுகளில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் சென்று வருவதற்கான திட்டம் இன்று முதல் அமலாகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியையும் அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை,133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நடைபெறுகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா என, 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தலா ரூ.4 கோடி மதிப்பில் கூடுதலாக இரு சொகுசு படகுகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் வாங்கப்பட்டன. தாமிரபரணி, திருவள்ளுவர் என பெயர் வைக்கப்பட்ட இந்த சொகுசு படகுகள், சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த படகுகளை இயக்க படகு தளத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இரு நவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை ஒன்றரை மணி நேரம் கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வருவதற்கு பயன்படுத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக இருகட்ட ஆய்வுகள் நடைபெற்ற நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைக்கிறார்.

அத்துடன் வட்டக்கோட்டை வரையிலான சுற்றுலா படகு சேவையையும் அமைச்சர் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. வசதியுடன் படகில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.450, சாதாரண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “ கன்னியாகுமரி படகு தளத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை சொகுசு படகுகளில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் சென்று வரும் திட்டம் இன்று முதல் அமலாகிறது. வட்டக்கோட்டையில் படகு நிறுத்துவதற்கு தற்போது படகுதள வசதி ஏதும் இல்லை.

இதனால் வட்டக்கோட்டைவரை செல்லும் சொகுசு படகு, அங்கிருந்து கடல்வழியே சுற்றி மீண்டும் கன்னியாகுமரி படகு தளத்தை அடையும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை பொறுத்து இரு படகுகளும் இயக்கப்படும். தினசரி எத்தனை முறை படகு சேவை என்பது, படகு பயணம் நடைமுறைக்கு வந்த பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

6 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

22 days ago

சுற்றுலா

23 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்