குளுகுளு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குதூகலம்: திரும்பிய பக்கமெல்லாம் அலைமோதிய கூட்டம்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தனர்.

நேற்று காலை முதலே ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பெருமாள் மலை முதல் கொடைக்கானல் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பிரையன்ட் பூங்கா, ரோஜா கார்டனில் மலர் கண்காட்சியையொட்டி பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களுக்கு முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் மகிழ்ந்தனர்.

தூண் பாறை, பைன் பாரஸ்ட், மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். சீசன் காலங்களில் கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பகுதியை போல் பகலில் வெயில் சுட்டெரித்தது. ஆனால், மாலையில் சுற்றுலாப் பயணிகளை குளிர்விக்க 30 நிமிடங்களுக்கும் லேசாக மழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE