ராமேசுவரம்: அதிக கட்டணத்தால் வனத் துறையின் பாம்பன் பால சூழல் சுற்றுலா படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வம் இல்லாத நிலை காணப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடுகள் மற்றும் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக்கடலில் உருவான மணல் திட்டைப் பார்வையிடுவதற்கு வனத் துறையால் படகு சவாரி தொடங்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குருசடை தீவுக்கும் சூழல் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் மண்டபம் தோணித்துறை கடற்கரையிலிருந்து வனத் துறை சார்பில் பாம்பன் பால சூழல் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்புக்காக உயிர் காக்கும் கவச உடையுடன் பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர் ஒருவரும் படகில் பணியமர்த்தப்பட்டுள்ளார். படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
» சாலை, பாலப் பணிகளைமுன்கூட்டியே முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
» வங்கக் கடலில் உருவான `மொக்கா' இன்று தீவிர புயலாக மாறும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தப் படகு சவாரியில் மண்டபம் தோணித்துறை கடற்கரையில் உள்ள வனத்துறை படகு இறங்குதளத்திலிருந்து பாம்பன் சாலை நடுப்பாலம் பகுதி வரையிலும் கண்ணாடி இழைப் படகு மூலம் சுமார் 2 கி.மீ தொலைவுக்குப் பயணிகளை அழைத்துச் செல்வார்கள். பயணத் தின்போது படகின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியாக பவளப்பாறைகள், மீன் களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழலாம்.
கரோனா பரவலுக்கு முன்னதாக மண்டபம் பேரூராட்சி சார்பில் இதே பகுதிக்கு மண்டபம் கடற்கரை பூங்காவில் கண்ணாடி இழைப் படகில் ஒருவருக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் வனத் துறையினர் படகு சவாரிக் கட்டணமாக ரூ.300 வசூலிப்பது மிகவும் அதிகம் என்றும் இதை அனைவருக்கும் ஏற்ற வகையில் குறைக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
13 days ago
சுற்றுலா
21 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
25 days ago
சுற்றுலா
27 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago