சென்னை: வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2,500வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு இடமாகவும் இது திகழ்கிறது.
தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கரோனா பரவலுக்கு முன்பு 11 சிங்கங்கள் இருந்தன. கரோனா பரவல் காலத்தில் பூங்கா மூடப்பட்டபோது, கரோனா தொற்றால் 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதனால், வண்டலூர் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது.
ஏற்கெனவே ஒரு சிங்கம், லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விலங்குகள் பரிமாற்ற முறையில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கம் ஒன்று வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது 3 வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு தற்போது பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த விலங்குக்கு மாற்றாக, வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளை புலி ஒன்று பன்னர்கட்டா பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
30 mins ago
சுற்றுலா
5 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
11 days ago
சுற்றுலா
14 days ago
சுற்றுலா
14 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
24 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago